அழிவின் விளிம்பில் நீர் அலைகள் இசைக்கருவி... மீட்டெடுக்க அரசுக்கு கோரிக்கை.!

அழிவின் விளிம்பில் நீர் அலைகள் இசைக்கருவி... மீட்டெடுக்க அரசுக்கு கோரிக்கை.!
அழிவின் விளிம்பில் நீர் அலைகள் இசைக்கருவி... மீட்டெடுக்க அரசுக்கு கோரிக்கை.!

ஜலதரங்கம் என்றழைக்கப்படும் நீர் அலைகள் இசைக்கருவியை மீட்டெடுக்க அரசு ஊக்குவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நீரால் நிரப்பப்பட்ட பீங்கான் கிண்ணங்களைக் கொண்டு இசைக்கப்படும் இசைக்கருவி ஜலதரங்கம். சுரங்களை உண்டாக்கும் இந்த பீங்கான் கிண்ணங்கள் வாசிக்கும் கலைஞர், தன் முன்னால் அரை வட்ட வடிவில் வைக்கப்பட்டிருக்கும் 16 கிண்ணங்களை சுருதிக்கு ஏற்றவாறு சிறிய குச்சிகளைக் கொண்டு இசைப்பார்கள். இந்த இசை கேட்பவர்களின் காதுகளுக்கு விருந்து படைக்கும்.


இந்த நீர் இசைக்கருவியை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணிய பாகவதர் குடும்பத்தினர் கடந்த 75 ஆண்டுகளாக வாசித்து வருகின்றனர். இவருடைய தந்தை ராமையா பாகவதர் 1934 ஆம் ஆண்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலின் ஆஸ்தான பாடகராக இருந்துள்ளார். இவரது மூத்த மகன் சரவணமுத்து பாகவதர் 1956 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.


ஜலதரங்கம் வாசிக்க ஏதுவாக பீங்கான் கோப்பைகள் கூட தமிழகத்தில் இல்லாத சூழல் உள்ளதாகவும், அழியும் நிலையில் உள்ள ஜலதரங்கம் என்றழைக்கப்படும் நீர் அலை இசையை தமிழக அரசு விழாக்கள், மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் இசைக்கவும் அதனை மீட்டெடுக்க உதவ வேண்டும் என்றும் சுப்பிரமணிய பாகவதர் கோரிக்கை வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com