\
கருத்துகணிப்பு பொய் ஆகும்; அதிமுக கூட்டணி வெல்லும்: ஜே.பி.நட்டா சிறப்புப் பேட்டி

கருத்துகணிப்பு பொய் ஆகும்; அதிமுக கூட்டணி வெல்லும்: ஜே.பி.நட்டா சிறப்புப் பேட்டி

கருத்துகணிப்பு பொய் ஆகும்; அதிமுக கூட்டணி வெல்லும்: ஜே.பி.நட்டா சிறப்புப் பேட்டி
Published on

தமிழகத்தில் அதிமுக கூட்டணி தேர்தல் கருத்து கணிப்புகளை பொய்யாக்கிவிட்டு மீண்டும் ஆட்சியமைக்கும் என பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் புதிய தலைமுறைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்:

கேள்வி: உங்கள் பரப்புரைக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறுமா?

பதில்: தெருக்களில் மக்கள் கூடுகின்றனர். ஆதரவு முழக்கம் எழுப்புகின்றனர். எங்களை வரவேற்கின்றனர். அதிமுக அணி மீண்டும் ஆட்சியமைத்து வளர்ச்சியை தர வேண்டும் என விரும்புகின்றனர்.

கேள்வி: தேர்தல் முடிவுகள் குறித்த சில கருத்து கணிப்புகள் உங்களுக்கு சாதகமாக இல்லையே?

பதில்: எல்லாருமே கருத்து கணிப்பு நடத்துகின்றனர். ஆனால் இங்கு கூடியுள்ள கூட்டமே தேர்தல் முடிவு என்ன எனச் சொல்லும்.

கேள்வி: தங்கள் தேர்தல் பணிகளை முடக்க வருமான வரி சோதனை நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனவே?

பதில்: நல்ல செயல்கள் செய்தவர்களுக்கு எந்த கெடுதலும் வராது. தவறு செய்தவர்கள் அதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டியிருக்கும். சட்டம் தன் கடமையை செய்து வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com