நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
Published on

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஜெ.தீபா ஆதரவு தெரிவித்துள்ளார். 

2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாட்டில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடம்பெறுள்ளன. அத்துடன் அக்கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து கட்சிகளிடையே தொகுதி பங்கீடும் முடித்துள்ளன.  

இதைத்தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளருமான தீபா கடந்த 15 ஆம் தேதி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, “நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போகிறோம். அத்துடன் சசிகலா தொடர்புடைய எந்த அமைப்போடும், எந்த நிலையிலும் கூட்டணி இல்லை. மேலும் அஇஅதிமுக தலைவர்களுடன் கூட்டணி கூறித்த பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதனால் இந்தத் தாமதமான அறிவிப்பு. அத்துடன் அனைத்து மாவட்ட செயலாளர்களிடமும் கருத்து கேட்டக்கப்பட்டது. அதில் அவர்கள் இந்தத் தேர்தலில் நாம் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தார்கள். கட்சியின் தொண்டர்களும் அதே விருப்பத்தை முன்வைத்தனர். இதனால் நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்துள்ளோம்” எனக் கூறினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தீபா, தொண்டர்களின் விருப்பப்படி நாடாளுமன்றத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் எனக் கூறியுள்ளார். மேலும் அதிமுக தலைமையிலிருந்து அழைப்பு வந்தால் பரப்புரை மேற்கொள்வேன் எனவும்  அதிமுகவுடன் இணையும் பேச்சுவார்த்தை தேர்தலுக்குப் பிறகு தொடரும் எனவும் குறிப்பிட்டார். அதிமுக நிர்வாகிகள் எங்களது ஆதரவை ஏற்றுக்கொண்ட பிறகே தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளேன் எனவும் அதிமுகவின் வெற்றிக்காக எனது கட்சி தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com