டிரெண்டிங்
காத்திருந்து வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெ.தீபா
காத்திருந்து வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெ.தீபா
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட காத்திருந்து வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ஜெ.தீபா.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையைச் சேர்ந்த தீபா பிற்பகல் 1.30 மணிக்கு மனு தாக்கல் செய்ய டோக்கன் வாங்கினார். ஜெ.தீபாவுக்கு 91ம் எண் டோக்கன் வழங்கப்பட்டது. வேட்புமனுத்தாக்கல் செய்ய ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கால தாமதமாக வந்ததால் காவல்துறையினர் அவரை அலுவலகத்திற்குள் அனுமதிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தி காத்திருந்தே தீபா மனு தாக்கல் செய்தார். தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி தினமான இன்று 40க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர்.

