க்ரிப்டோ காதலில் மூழ்கி 14 கோடியை இழந்த நிதி ஆலோசகர்.. டிண்டர் பழக்கத்தால் இத்தாலியருக்கு நேர்ந்த சோகம்!

இத்தாலியர் ஒருவர் டிண்டர் மூலம் பழகிய நபரின் பேச்சைக் கேட்டு க்ரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்ததில் 14 கோடியே 85 லட்சத்தை இழந்திருக்கிறார்.
Tinder Scam
Tinder ScamPixabay

ஹாங்காங்கில் வசித்து வந்த இத்தாலியர் ஒருவர் டிண்டர் மூலம் பழகிய நபரின் பேச்சைக் கேட்டு க்ரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்ததில் 14 கோடியே 85 லட்சத்தை இழத்திருக்கிறார். இதில் சோகமான நிகழ்வு என்னவென்றால் பணத்தை இழந்த அந்த 55 வயது முதியவர் உண்மையில் ஒரு நிதி ஆலோசகராம்.

முதலீட்டு தரகர் என காட்டிக்கொண்ட அந்த மோசடி கும்பலிடம் நிதி ஆலோசகர் எப்படி பணத்தை இழந்தார் என்ற விவரத்தை பார்க்கலாம். இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்திருக்கிறது.

online scam
online scam

டிண்டர் எனும் பிரபல டேட்டிங் செயலி மூலம் கிடைத்த பழக்கத்தால் சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு தரகர் என தன்னைக் காட்டிக் கொண்ட அந்த பெண்ணுடன் இத்தாலியர் வாட்ஸ் அப் வாயிலாகவும் உறவை வளர்த்திருக்கிறார். இருவரும் நல்ல ரொமான்ட்டிக் உறவிலும் இருந்து வந்திருக்கிறார்கள்.

அந்த சமயத்தில்தான் ஒரு போலியான ட்ரேடிங் கணக்கை ஏற்படுத்தி அதில் க்ரிப்டோ கரன்ஸியாக முதலீடு செய்ய இத்தாலியர் தூண்டப்பட்டார். டிஜிட்டல் ரீதியாக பணத்தை முதலீடு செய்யும் போது நல்ல லாபமே கிடைக்கும் என்ற தனது நிதித்துவ எண்ணத்துக்கு சமாதானமும் செய்துக் கொண்டிருக்கிறார் அந்த நபர்.

Crypto currency scam
Crypto currency scam

இதன் காரணமாக மார்ச் 6ம் தேதி முதல் 23ம் தேதி வரை, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு 22 முறை கிட்டத்தட்ட 14.2 மில்லியன் ஹாங்காங் டாலர் அதாவது 14 கோடியே 85 லட்சம் ரூபாயை பரிவர்த்தனை செய்திருக்கிறார்.

ஆனால் இத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தும் தனது எந்த லாபமும் கிடைக்காததை அடுத்தே தான் மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறார். இதனையடுத்தே போலீசை நாடி நடந்ததை கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக பேசியுள்ள காவல்துறையினர், “இத்தாலியரின் சொத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த திருட்டுத்தனத்திற்கு உரிய ஆணையின் படி 10 ஆண்டுகள் கடும் சிறை தண்டனையே விதிக்கப்படும்” எனக் கூறியிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com