"ஐபிஎல்லில் மட்டுமே விளையாடணும்னு நினைத்தால் அது சரிப்படாது" தோனிக்கு கபில்தேவ் அட்வைஸ் !

"ஐபிஎல்லில் மட்டுமே விளையாடணும்னு நினைத்தால் அது சரிப்படாது" தோனிக்கு கபில்தேவ் அட்வைஸ் !
"ஐபிஎல்லில் மட்டுமே விளையாடணும்னு நினைத்தால் அது சரிப்படாது" தோனிக்கு கபில்தேவ் அட்வைஸ் !

ஐபிஎல்லில் மட்டுமே விளையாடினால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப்பெற்ற தோனி, சிஎஸ்கே அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். பஞ்சாபுடனான நேற்றையப் போட்டியில் பேசிய தோனி அடுத்த ஐபிஎல் தொடரிலும் தான் விளையாட இருப்பதாக தெரிவித்தார். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். எல்லாம் சரியாக சென்றால் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடங்கும்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் தோனி குறித்து பேசியுள்ளார் அதில் "ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் தொடரில் மட்டும் தோனி விளையாட நினைத்தால் அது தவறானதாக இருக்கும். இப்படி ஒவ்வொரு ஆண்டு மட்டும் விளையாடினால் அவரால் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்த முடியாது. அவரின் வயது பற்றி பேசத் தேவையில்லை, அது தேவையற்றது. ஆனால் நிறைய கிரிக்கெட் விளையாடினால்தான் அதற்கு ஏற்ப அவருடைய உடற் தகுதி மேம்படும்" என்றார்.

மேலும் பேசிய அவர் "திடீரென 10 மாதம் நீங்கள் விளையாடவில்லை. இப்போது ஐபிஎல்லில் விளையாடினீர்கள் என்ன நேர்ந்தது என எல்லோருக்கும் இப்போது தெரிந்திருக்கும். ஒவ்வொரு கிரிக்கெட் தொடரிலும் ஏற்றம் இறக்கங்கள் இருப்பது சகஜம்தான். ஆனால் கிரிக்கெட் தொடர்ந்து விளையாட வேண்டும். இதுபோன்ற நிலை கிறிஸ் கெயிலுக்கும் ஏற்பட்டது. முதலில் தோனி உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாட வேண்டும். அவர் ஒரு சாதனையாளர். இதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும்" என்றார் கபில் தேவ்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com