\
ஜெயலலிதா இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சோதனை

ஜெயலலிதா இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சோதனை

ஜெயலலிதா இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சோதனை
Published on

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சசிகலா குடும்பத்தினர் வீடுகள் மற்றும் அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களில் சோதனை நடத்தி வந்த வருமான வரித்துறையினர் இன்று போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனையை நடத்த ஆரம்பித்துள்ளனர். இரவு ஒன்பது மணிக்குத் தொடங்கிய சோதனை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சோதனை நடைபெறுவதை அறிந்து போயஸ் தோட்ட இல்லத்தின் முன் அதிமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அவர்கள் மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்த்து முழக்கங்களை எழுப்பினர்.  

இதற்கு முன்பு 1996 டிசம்பர் ஏழாம் தேதி முதல் 11ம் தேதி வரையில் போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடந்தது. தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருமானவரித்துறையினர் அந்த இல்லத்தில் சோதனையை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com