கரூர் சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

கரூர் சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு

கரூர் சுயேச்சை வேட்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு
Published on

கரூர் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராஜேஷ் கண்ணன் என்பவரின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும் கரூர் மங்கி காட்டன்ஸ் உரிமையாளருமான ராஜேஷ் கண்ணன் என்பவர் கரூர் தொகுதியில் குப்பைத்தொட்டி சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவர் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்துக்கு புகார் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் திமுக, அதிமுக கட்சியினர் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக பணிமனைகளை அமைத்து செயல்பட்டுவருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இவருடைய திரைச்சீலை தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com