
கோடநாடு கர்சன் எஸ்டேட்டில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக சோதனை நடத்திவருகிறார்கள்.
இங்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து மேலாளர் நடராஜனை, வருமானவரித்துறை அதிகாரிகள் ரகசிய அறையில் வைத்து, விசாரணை செய்து வருகின்றனர். நேற்று பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்களை இரவு ஒரு அறையில் வைத்து, பூட்டி சீல் வைத்திருந்த நிலையில், இன்று காலை மீண்டும் அறையை திறந்த அதிகாரிகள் ஆவணங்களை சரிப்பார்த்ததுடன், வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட வங்கிக்கணக்கு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று எஸ்டேட்டின் முக்கிய நிர்வாகிகள், ஊழியர்களிடம் விசாரணை நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.