டிடிவி தினகரன் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை ஆய்வு!

டிடிவி தினகரன் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை ஆய்வு!
டிடிவி தினகரன் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை ஆய்வு!

புதுச்சேரியை அடுத்த ஆரோவில் பகுதியில் உள்ள டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் கடந்த நவம்‌பர் மாதம் நடைபெற்ற வ‌ருமான வரித்துறை சோதனையில், டிடிவி தினகரனுக்கு சொந்தமான பண்ணை வீட்டில் உள்ள சில அறைகளுக்கு சீல் வைக்‌கப்பட்டது. 

இந்நிலையில் இன்று சென்னையை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் தினகரனின் பண்ணை வீட்டில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாக தெரிகிறது. மேலும் புதுச்சேரி வருமான வரித்துறை துணை ஆணையர் பண்ணை வீட்டிற்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com