\
போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம்

போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம்

போயஸ் கார்டனில் ரெய்டு நடத்தியது ஏன்?: வருமான வரித்துறை விளக்கம்
Published on

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.

சசிகலாவின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர். மொத்தமாக 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையின் தொடர்ச்சியாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. அங்கிருந்து லேப்டாப், 2 பென்டிரைவ் உள்ளிட்டவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற சோதனை தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக பொருளாதார உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டே, சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனையில் 70-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், தமிழக போலீசாரின் உதவியே போதுமானதாக இருந்ததால் துணை ராணுவத்தை நாடவில்லை எனவும் வருமான வரித்துறை தெவித்துள்ளது.

உறுதியான தகவல், ஆவணங்கள் அடிப்படையில் போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அங்கு ஜெயலலிதா அறையில் சோதனை நடத்தப்படவில்லை எனவும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் சசிகலாவின் 4 அறைகள், பூங்குன்றனின் ஒரு அறையில் சோதனை நடந்ததாகவும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள பென்டிரைவ்களை ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. பெங்களூரு சிறையிலுள்ள சசிகலா, இளவரசியிடம் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் எனவும் வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com