சிக்கன் பிரியாணி- ரூ.180, மட்டன் பிரியாணி- ரூ.200! வேட்பாளர்களுக்கான விலைப்பட்டியல்

சிக்கன் பிரியாணி- ரூ.180, மட்டன் பிரியாணி- ரூ.200! வேட்பாளர்களுக்கான விலைப்பட்டியல்
சிக்கன் பிரியாணி- ரூ.180, மட்டன் பிரியாணி- ரூ.200! வேட்பாளர்களுக்கான விலைப்பட்டியல்

சென்னை மாவட்ட வேட்பாளர்களின் செலவினங்களுக்கான விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் சிக்கன் பிரியாணிக்கு 180 ரூபாய் என்றும் மட்டன் பிரியாணிக்கு 200 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பரப்புரையின் போது தங்களது தொகுதிக்கு 30,80,000 ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அந்த வகையில் வேட்பாளர்கள் செலவுகளை கணக்கிட ஏதுவாக பொருள்களுக்கான விலை நிர்ணய பட்டியலை சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியம், மாநகராட்சி ஆணையாளருமான பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.

இதன்படி பந்தலுக்கான அதிகபட்ச விலை 3,500 ரூபாய், சாமினா பந்தலுக்கு 9,500 ரூபாய் , ஆயிரம் சுவரொட்டிகளுக்கு 12,500 ரூபாய், ஒரு சதுர அடி கொண்ட கட் அவுட்டுக்கு 65 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர வாழை மரத்துக்கு 700 ரூபாய், பட்டாசுக்கு 600 ரூபாய், தொப்பிக்கு 50 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சைவ பிரியாணி, சாப்பாடு, சிற்றுண்டிக்கு 100 ரூபாய், கலவை சாதத்துக்கு 50 ரூபாய், குளிர்பானங்களுக்கு 75 ரூபாய், தேநீருக்கு 10 ரூபாய், காபி மற்றும் பாலுக்கு 15 ரூபாய், தண்ணீர் ஒரு லிட்டருக்கு 20 ரூபாய், மோருக்கு 10 ரூபாய், ரஸ்னாவுக்கு 20 ரூபாய் என விலை கூறப்பட்டுள்ளது.

மட்டன் பிரியாணி 200 ரூபாய், சிக்கன் பிரியாணி 180 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தங்கும் விடுதிகளில் ஒரு நாள் வாடகையாக, 5 நட்சத்திர விடுதிகள் எனில் 7,500 ரூபாயும், 3 நட்சத்திர விடுதிகள் எனில் 5000 ரூபாயும், சாதாரண விடுதிகளில் 3 ஆயிரத்து 500 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை தவிர பரப்புரைக்கு பயன்படுத்தும் வாகனங்களின் ரகங்களுக்கு ஏற்பவும், இருக்கைகள் உள்ளிட்டவைகளுக்கும் கூட தேர்தல் அதிகாரி விலையை அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com