\
தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சிக்கிறது பாஜக: விஜயகாந்த்

தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சிக்கிறது பாஜக: விஜயகாந்த்

தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சிக்கிறது பாஜக: விஜயகாந்த்
Published on: 

தமிழகத்தில் பாஜக ஆட்சி செய்ய முயற்சிக்கிறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கோவையில் அரசு அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஆளுநரின் இந்த செயல்பாடுகள் தமிழக அரசு நிர்வாகத்தில், உரிமையில் தலையிடும் அத்துமீறல் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. 

இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடு குறித்து விஜயகாந்த், "பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநரின் அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சி செய்ய முயற்சி செய்கிறது என்றும் மக்களுக்கான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத நிலையில் தமிழக அரசு உள்ளது என்றும் கோவை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com