எண்ணி ரெண்டே மாசம்தான்.. முறிந்ததா லலித்-சுஷ்மிதா காதல் உறவு? - வதந்திக்கு வித்திட்ட Bio!

எண்ணி ரெண்டே மாசம்தான்.. முறிந்ததா லலித்-சுஷ்மிதா காதல் உறவு? - வதந்திக்கு வித்திட்ட Bio!
எண்ணி ரெண்டே மாசம்தான்.. முறிந்ததா லலித்-சுஷ்மிதா காதல் உறவு? - வதந்திக்கு வித்திட்ட Bio!

முன்னாள் ஐ.பி.எல். சேர்மனும், தொழிலதிபருமான லலித் மோடியும், முன்னாள் பிரபஞ்ச அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்னும் காதல் உறவில் இருப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தனர்.

நீண்ட நாட்களாக டேட்டிங்கில் ஈடுபட்ட இருவரும் கடந்த ஜூலை 15ம் தேதிதான் அதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். இது தொடர்பாக லலித் மோடி பதிவிட்ட ட்வீட்டில், “ஒரு வழியாக புது வாழ்க்கையை தொடங்கிவிட்டோம். இருவரும் டேட்டிங் செய்து வருகிறோம். கல்யாணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அதுவும் நடக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

லலித்-சுஷ்மிதாவின் காதல் உறவு குறித்து தெரிய வந்ததும் ஹாட் டாபிக்காவே வலம் வந்தது. இப்படி இருக்கையில், காதலை உறுதி செய்து இரண்டு மாதங்கள் கூட முழுமை பெறாத நிலையில் லலித் மோடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்க பயோவில் ”My Love" என சுஷ்மிதா சென்’னை டேக் செய்திருந்ததை தற்போது நீக்கியிருக்கிறார். இதோடு, சுஷ்மிதாவுடன் இருந்த ப்ரோஃபைல் பிக்சரையும் மாற்றியிருக்கிறார்.

இதன் மூலம் லலித் மோடியும் சுஷ்மிதா சென்னும் அதிகாரப்பூர்வமாக பிரேக்கப் செய்திருக்கிறார்கள் என்ற புரிதலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காதல் உறவில் இருப்பதாக அறிவித்தவர்கள் பிரேக்கப் ஆனதா இல்லையா என்பதை அறிவிக்காததால் பல வதந்திகளுக்கு வித்திட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com