மீண்டும் திறக்கப்பட்ட நெல்லை இருட்டுக்கடை அல்வா!

மீண்டும் திறக்கப்பட்ட நெல்லை இருட்டுக்கடை அல்வா!

மீண்டும் திறக்கப்பட்ட நெல்லை இருட்டுக்கடை அல்வா!
Published on
தமிழகத்தில் புகழ்பெற்ற திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதனைத்தொடர்ந்து கடந்த 20 நாட்களாக கடை அடைக்கப்பட்டிருந்தது. இதனால் இனிப்புப் பிரியர்களும் உள்ளூர்வாசிகளும் பூட்டப்பட்ட கடை எப்போது திறக்கும் என்ற ஏக்கத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ஹரிசிங் இறந்த 20 நாட்களுக்குப் பிறகு, அவரது பேரன் சூரத் சிங் கடை நிர்வாக பொறுப்பேற்றுக் கொண்டு அல்வா வியாபாரத்தை தொடங்கியுள்ளார். தன்னுடைய தாத்தா ஹரிசிங் கடையில் எவ்வளவு கூட்டம், நெரிசல் இருந்தாலும் வாடிக்கையாளர்களிடம் புன்முறுவலோடு தான் நடந்துகொள்வதாக நினைவுகூரும் சூரத் சிங், தானும் தாத்தா வழியில் அவ்வாறே பின்பற்றி, இருட்டுக்கடை அல்வாவின் பாரம்பரியமான அதே சுவையுடன் அதே தரத்துடன் வியாபாரத்தை தொடரவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
1930- களில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் துவங்கப்பட்டு, அடுத்தடுத்து தலைமுறை தொடர்ந்து, இப்போது நான்காம் தலைமுறை வாரிசு இருட்டுக்கடை அல்வா என்கிற பெரும் பாரம்பரிய ப்ராண்டை கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com