ஐபிஎல் 2022: உமேஷின் வேகத்தில் திணறிப்போன பஞ்சாப்!

ஐபிஎல் 2022: உமேஷின் வேகத்தில் திணறிப்போன பஞ்சாப்!
ஐபிஎல் 2022: உமேஷின் வேகத்தில் திணறிப்போன பஞ்சாப்!

ஐபிஎல்: உமேஷ் யாதவ் வேகப்பந்துவீச்சில் சிக்கி பஞ்சாப் அணி 137 ரன்களில் ஆல் அவுட் ஆனது. கொல்கத்தாவுக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயம்!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 8-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தார் கொல்கத்தா நைட் ரைடரஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர். ஷிகர் தவானுடன் ஓப்பனிங் இறங்கிய பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வாலுக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. உமேஷ் யாதவ் வேகப்பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய பனுகா ராஜபக்‌ஷே 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என வான வேடிக்கை காட்டி 31 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

நிலைத்து நின்று ஸ்கோரை தவான் உயர்த்துவார் என எதிர்பார்த்த நிலையில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து நடையைக் கட்டினார். அடுத்து வந்தவர்களும் 20 ரன்கள் கூட எடுக்காமல் பெவிலியனுக்கு “பேஷன் ஷோ” காட்டியதால் ரன் ரேட் “6”ஐ தொட்டவாறே பயணித்தது. லியாம் லிவிங்ஸ்டன் 19 ரன்களிலும், ராஜ் பாவா 11 ரன்களிலும் வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாரூக் கான், ஓடியன் ஸ்மித் டக் அவுட்டாக பஞ்சாப்பின் ஸ்கோர் ஊசலாட துவங்கியது.

இறுதியாக பவுலிங்கில் தாக்கத்தை ஏற்படுத்த கொண்டுவரப்பட்ட ரபாடா, பேட்டிங்கில் கலக்கத் துவங்கினார். 4 பவுண்டரிகள் விளாசி 25 ரன்கள் விளாசிய நிலையில் அவரும் அவுட் ஆனார். அடுத்து வந்தவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட 18.2 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. 23 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார் உமேஷ் யாதவ். இடைவேளைக்கு பிறகு 138 ரன்கள் இலக்கை நோக்கி விளையாட உள்ளது. வலுவான பேட்டிங் லைன் அப்புடன் உள்ள கொல்கத்தாவை எப்படி சமாளிக்க போகிறது பஞ்சாப்? 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com