ஆடும் லெவனில் ஜடேஜா இடம்பெறவில்லை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்

ஆடும் லெவனில் ஜடேஜா இடம்பெறவில்லை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்
ஆடும் லெவனில் ஜடேஜா இடம்பெறவில்லை.. டெல்லிக்கு எதிராக சிஎஸ்கே முதலில் பேட்டிங்
சிஎஸ்கே டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா இடம்பெறவில்லை.

இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் சிஎஸ்கே அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரிட்சை நடத்துகிறது. இந்நிலையில், சிஎஸ்கே அணயின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.

அணி விவரம்:

இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணியில், ருதுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயின் அலி, எம்எஸ் தோனி, ஷிவம் துபே, டுவைன் பிராவோ, மகேஷ் தீக்ஷனா, சிமர்ஜீத் சிங், முகேஷ் சவுத்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 தோல்விகளையும், 3 வெற்றிகளையும் அடைந்துள்ளது. தொடர் தோல்வி காரணமாக தன்னுடைய பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டதட்ட மங்கச் செய்துள்ளது. 

இந்த சீசனில் தொடர்ச்சியாக ஜடேஜா மோசமான ஃபார்மில் உள்ளார். பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கூட கடைசி நேரத்தில்  ஜடேஜா சொதப்பினர். தோல்விக்கு அவரும் ஒரு முக்கியமான காரணமாக அமைந்தார். ஜடேஜா நடப்பு ஐபிஎல் சீசனில் 10 போட்டிகளில் மொத்தமே 116 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை 5 விக்கெட் எடுத்துள்ளார். 

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியில் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com