இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் அணிகள் மோதல்

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் அணிகள் மோதல்

இன்று தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா: முதல் ஆட்டத்தில் மும்பை - பெங்களூர் அணிகள் மோதல்
Published on

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்தியன் சூப்பா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசன் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ஹைதராபாத் சன்ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எதிர்கொள்கிறது. 

கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் இந்த சீசனும் ரசிகர்கள் இல்லாத பூட்டிய அரங்கிற்குள் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் இணைந்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சி குழுவினர், நிர்வாகிகள் எந்த காரணத்தை கொண்டும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி டி-20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இதனால் ஐபிஎல் டி-20 தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com