நடராஜன் 'இஸ் பேக்' ஹைதராபாத் அசத்தல் பவுலிங்- அரைசதம் விளாசிய ராகுல், தீபக்!

நடராஜன் 'இஸ் பேக்' ஹைதராபாத் அசத்தல் பவுலிங்- அரைசதம் விளாசிய ராகுல், தீபக்!

நடராஜன் 'இஸ் பேக்' ஹைதராபாத் அசத்தல் பவுலிங்- அரைசதம் விளாசிய ராகுல், தீபக்!
Published on

15-வது சீசன் ஐபிஎல் போட்டியின் 12-வது லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக லக்னோ அணி நிர்ணயித்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல்டி20 போட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 11 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. 12-வது சூப்பர் லீக் ஆட்டத்தில், கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், கேன் வில்லியம்ஸன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

நவி மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சைன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்ய லக்னோ அணி களமிறங்கியது. சன் ரைசர்ஸ் அணியில் மாற்றம் எதுவும் செய்யாதநிலையில், லக்னோ அணியில் துஷ்மந்திரா சமீராவுக்குப் பதிலாக ஜேசன் ஹோல்டர் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கே.எல்.ராகுலும், குயின்டன் டி காக்கும் களமிறங்கினர். ஆனால், தொடக்கம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 1 ரன் எடுத்திருந்தநிலையில், 1.4- வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து களமிறங்கிய எவின் லூயிஸ், மனிஷ் பாண்டே ஆகியோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி பவர் ப்ளேயில் 3 விக்கெட்டுகளை அடுத்தடுத்து பறிகொடுத்து தடுமாறியது.

இதன்பின்னர், துவக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுலுடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த கூட்டணி அதிரடியாக விளையாடி, ரன்ரேட்டை உயர்த்தியது. போட்டியின் இறுதியில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு அந்த அணி 169 ரன்களை குவித்தது. கே.எல். ராகுல் 61 ரன்களும், தீபக் ஹூடா 51 ரன்களும் எடுத்திருந்தனர்.

சன்ரைசர்ஸ் அணியில், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன், ரொமாரியோ ஷெப்பர்ட் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் டி நடராஜன், லக்னோ அணி வீரர்களின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி சிறப்பாக விளையாடினர். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி தற்போது விளையாடி வருகிறது. துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் களமிறங்கியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com