'ஷிவம் துபே எதையும் கற்றுக்கொள்ளவில்லை' கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்

'ஷிவம் துபே எதையும் கற்றுக்கொள்ளவில்லை' கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்
'ஷிவம் துபே எதையும் கற்றுக்கொள்ளவில்லை' கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்

''பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஆடிக்கொண்டிருக்கும் வேளையில், அதுவரை பந்து வீசாத ஷிவம் துபேவுக்கு 19வது ஓவர் வழங்கியது நியாயமில்லை'' என்று விமர்சித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 7-வது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் 18-ஆவது ஓவா் முடிவில் 34 ரன்கள் தேவை இருந்த நிலையில், சிஎஸ்கே அணியின் ஷிவம் துபே 19-வது ஓவரில் 2 வைட் உள்பட 25 ரன்களை வாரி வழங்கினார். இதனால், லக்னோ அணி 211 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

சென்னை அணியின் தோல்விக்கு ஷிவம் துபே வீசிய இந்த 19வது ஓவரும் ஒரு காரணமாக அமைந்துவிட்டதாக ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஆட்டத்தில் ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்த ஷிவம் துபேவுக்கு மிக முக்கியமான ஓவரில் அவரை பந்துவீச கேப்டன் ஜடேஜா அழைத்தது வியப்பளித்தது.


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், "ஷிவம் துபே வரையறுக்கப்பட்ட ஓவர்களை வீசுபவர். அவர் இப்போட்டியில் லெந்த் பால் வீசி அதற்கான பலனை சந்தித்திருக்கிறார். பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஆடிக்கொண்டிருக்கும் வேளையில், அதுவரை பந்து வீசாத ஷிவம் துபேவுக்கு 19வது ஓவர் கொடுத்தது நியாயமில்லை. ஆனால் பாருங்கள்... இது ஒரு லெந்த் பால். ஆனால் அவர் மெதுவாக பந்து வீசுகிறார். வறண்ட ஆடுகளத்தில் மெதுவாக பந்து வீசுவது சரிதான். ஆனால் பனியின் தாக்கம் உள்ள களத்தில் ஸ்லோ-பால் வீசுவது சரி கிடையாது. யாரை பந்துவீச அழைப்பது என்பதில் சிஎஸ்கேயின் முடிவு  தவறாக இருக்கிறது. சிவம் துபே எதையும் தெளிவாக  கற்றுக்கொள்ளவில்லை'' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: ஐபிஎல் 2022: மலிங்கா சாதனையை முறியடித்த பிரோவா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com