ஐபிஎல் பிளே ஆஃப்: இருப்பதோ 3 இடங்கள்; போட்டியிடும் அணிகளோ 6 !

ஐபிஎல் பிளே ஆஃப்: இருப்பதோ 3 இடங்கள்; போட்டியிடும் அணிகளோ 6 !
ஐபிஎல் பிளே ஆஃப்: இருப்பதோ 3 இடங்கள்; போட்டியிடும் அணிகளோ 6 !

ஐபிஎல் தொடர் இப்போது "பிளே ஆஃப்" சுற்றை நெருங்கி வருகிறது. இந்தத் தொடரில் இருக்கும் 8 அணிகளில் மும்பை மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. இதில் சென்னை அணி ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டது. இப்போது மும்பையை தவிர பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப்பெற முனைப்பு காட்டி வருகின்றன.

பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய மேற்கொண்ட அணிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.

ராயல் சாலஞ்ஜர்ஸ் பெங்களூரு: ஐபிஎல் தொடரின் கடைசி இரண்டுப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ள பெங்களூரு பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்ய அடுத்த இரண்டுப் போட்டிகளில் வெற்றிப்பெற வேண்டும். அடுத்த இரண்டுப் போட்டிகளில் டெல்லியையும் ஹைதராபாத்தையும் எதிர்கொள்கிறது. இந்த இரண்டுப் போட்டிகளிலும் வெற்றிப்பெற்றால் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தை பெறும். ஆனால் ஒருபோட்டியில் வெற்றிப் பெற்றால் மற்ற அணிகளின் நிலையை வைத்தே பிளே ஆஃப் பெங்களூருக்கு உறுதியாகும்.

டெல்லி கேபிட்டல்ஸ்: நெட் ரன் ரேட்டில் பெங்களூரைவிட சற்றே பின் தங்கி இருக்கிறது டெல்லி அணி. இதனால் இப்போதைக்கு புள்ளிகள் பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருக்கிறது டெல்லி. இதனால் டெல்லி அணியும் தங்களது அடுத்த இரண்டுப் போட்டிகளிலும் வெற்றிப்பெற வேண்டும்.ஒருவேளை இரண்டு போட்டிகளிலும் டெல்லி தோற்றால் 4 ஆவது இடத்தை பிடிக்கும் அடுத்த சுற்றுக்கும் தகுதிப்பெறும்.

பஞ்சாப்: சென்னை அணியுடனான போட்டியில் கொல்கத்தா தோற்றதால் பஞ்சாப் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் பஞ்சாப் அசத்தலான வெற்றியைப் பெற்றதால் அடுத்த இரண்டுப் போட்டிகளிலும் வெற்றிப் பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி தோற்றால் நான்காம் இடத்தை பிடிக்க மற்ற அணிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் போட்டியிடும் பஞ்சாப்.

கொல்கத்தா: சென்னை அணியுடனான போட்டியில் தோற்றாலும் கொல்கத்தாவுக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது. ஆனால் கொல்கத்தாவுக்கு இன்னும் ஒரு ஆட்டமே மீதம் இருக்கிறது. அதனை கண்டிப்பாக கொல்கத்தா வென்றாக வேண்டும். இதில் அவர்கள் முதல் நான்கு இடத்தில் நீடிக்க வேண்டுமென்றால் பஞ்சாப் அடுத்த இரண்டு ஆட்டங்களில் தோற்க வேண்டும் அதேவேளையில் ஹைதராபாத் ஓர் ஆட்டத்தில் தோற்க வேண்டும்.

ஹைதராபாத்: நெட் ரன் ரேட் மட்டுமே ஹைதராபாத்தின் பலமாக இருக்கிறது. ஆனால் அடுத்த இரண்டுப் போட்டிகளில் மும்பையையும், பெங்களூருவையும் எதிர்கொள்ள இருக்கிறது. இந்த இரண்டு அணிகளையும் ஹைதராபாத் கட்டாயமாக வெற்றிப்பெற வேண்டும். அப்போது 14 புள்ளிகளை ஹைதராபாத் பெறும். பின்பு மற்ற அணிகளின் வெற்றித் தோல்வியும், நெட் ரன் ரேட்டும் ஹைதராபாத்தின் பிளே ஆஃப் கனவை உறுதியாக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: அற்புதங்கள் நிகழ்ந்தால் மட்டுமே ராஜஸ்தான் அணியால் முதல் நான் இடத்துக்குள் வர முடியும். மிக மோசமான நெட் ரன்ரேட் ராஜஸ்தானுக்கு பெரும் பின்னடைவு. இதனால் அவர்கள் தங்களுடைய அடுத்த 2 போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும். அதேவேளையில் முதல் நான் இடத்துக்குள் தகுதிப்பெற வேறு அணிகள் ஏதும் 14 புள்ளிகளை பெறக் கூடாது. அதனால் ராஜஸ்தானுக்கு சிரமங்கள் நிறைய இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com