\
கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் - வெளிநாடு செல்ல நிபந்தனை

கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் - வெளிநாடு செல்ல நிபந்தனை

கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் - வெளிநாடு செல்ல நிபந்தனை
Published on

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் நாளை முடியும் நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அந்திய முதலீடு செய்ய கார்த்தி சிதம்பரம் உதவியதாக எழுந்த புகாரில் சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து கடந்த மார்ச் ஒன்றாம் தேதி சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். கார்த்தியை மார்ச் 24ஆம் தேதி வரை, அதாவது 13 நாட்களுக்கு நீதிமன்‌றக் காவலில் வைக்குமாறு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, கார்த்தி சிதம்பரம் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. 

நீதிமன்றக் காவல் நாளையுடன் நிறைவடையும் நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் இன்று கார்த்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. பிணைத் தொகையாக ரூ.10 லட்சம் செலுத்தவும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரம் விரும்பினால், சிபிஐ-யிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com