\
திண்டுக்கல்: அமைச்சரின் பரப்புரையில் ஈடுபட்ட பெண்களுக்கு பணப்பட்டுவாடா

திண்டுக்கல்: அமைச்சரின் பரப்புரையில் ஈடுபட்ட பெண்களுக்கு பணப்பட்டுவாடா

திண்டுக்கல்: அமைச்சரின் பரப்புரையில் ஈடுபட்ட பெண்களுக்கு பணப்பட்டுவாடா
Published on

திண்டுக்கல் அதிமுக வேட்பாளர் சீனிவாசன், பரப்புரையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், திண்டுக்கல் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று திண்டுக்கல் மரியநாதபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அப்பகுதி மக்கள் பரப்புரைக்காக அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து பரப்புரை முடிந்த பிறகு மேற்கு மரியநாதபுரம் பகுதி கல்லறைத் தோட்டத்தில் உள்ள காம்பவுண்டுக்குள் அழைத்துவரப்பட்ட ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 100 ரூபாய் கொடுக்கப்பட்டது. அப்போது இந்த காட்சியை படம் பிடித்த போது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் தகறாறில் ஈடுபட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com