'REJECTED'.. நிராகரிப்பதற்கு இப்படியெல்லாம் ஒரு ஆபத்தான காரணமா?.. நேர்காணல் பரிதாபங்கள்!

'REJECTED'.. நிராகரிப்பதற்கு இப்படியெல்லாம் ஒரு ஆபத்தான காரணமா?.. நேர்காணல் பரிதாபங்கள்!
'REJECTED'.. நிராகரிப்பதற்கு இப்படியெல்லாம் ஒரு ஆபத்தான காரணமா?.. நேர்காணல் பரிதாபங்கள்!

புதிதாக வேலைக்கு சேரும் நபர்களிடம் நிறுவனங்கள் கெடுபிடி காட்டுவது வழக்கமானதாக இருக்கும். குறிப்பாக முன் அனுபவம் இல்லாதவர்களாக இருந்தாலும் பரவாயில்லை என நேர்காணலுக்கான விளம்பரங்களை வெளியிட்டாலும், துறை சார்ந்து எந்த அளவுக்கு அனுபவம் உள்ளது என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்படுவதாக தொடர்ந்து சமூக வலைதளங்கள் மீம் உள்ளிட்ட பதிவுகளின் வாயிலாக அறிய முடியும்.

அதேபோல கொரோனா ஊரடங்கை அடுத்து உலகம் முழுவதும் வீட்டிலிருந்தே பணியாற்றும் வசதி பரவலாக்கப்பட்டு வருகிறது. இதற்கும் பணியாளர்களிடம் சொந்த லேப்டாப், கணினி போன்றவற்றை பயன்படுத்துமாறு சில நிறுவனங்கள் கேட்பதாகவும் குறிப்பிடப்படுகின்றன.

இந்த நிலையில், புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனம் ஒன்றின் நேர்காணலை சந்தித்த நபர் ஒருவரிடம் ஆப்பிள் மேக் புக் இருப்பவர்களை மட்டும்தான் வேலைக்கு எடுப்போம் என மனிதவள துறை (HR) ஊழியர் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிராகரிப்பதற்கு இப்படியெல்லாம் ஒரு ஆபத்தான காரணமா? என்ற தலைப்பில் அந்த பதிவு இடப்பட்டிருக்கிறது. அதில், “இன்டெர்ன்ஷிப் வேலைக்காக ஆரம்பகட்டத்தில் இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் விண்ணப்பித்திருந்தேன். அதன் HR தொடர்புகொண்டு வேலை குறித்து கலந்தாலோசித்து விவரங்களை பெற்றார்.

அப்போது, முழுநேர வேலையாளாக இல்லாதவர்களுக்கு நாங்கள் லேப்டாப் கொடுக்கமாட்டோம் என்று கூறிய அந்த HR பெண், என்னிடம் லேப்டாப்பும், WIFI வசதியும் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு என்னிடம் விண்டோஸ் லேப்டாப் உள்ளது என்றேன். இதனைக் கேட்ட அந்த HR, நாங்கள் ஆப்பிள் மேக் புக் உள்ளவர்களாக மட்டுமே வேலைக்கு நியமிக்க பார்க்கிறோம் எனக் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துவிட்டார்.” இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பதிவைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த இது போன்ற நிகழ்வுகளை பகிர்ந்தும், அந்த HR பெண்ணை வசை பாடியும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com