ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அக்கறையுள்ள மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பெருமிதம்

ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அக்கறையுள்ள மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பெருமிதம்

ஆசிரியர்கள், மாணவர்கள் மீது அக்கறையுள்ள மாநிலம் தமிழகம்: ஓபிஎஸ் பெருமிதம்
Published on

இந்தியாவிலேயே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அக்கறை கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக திகழ்வதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று ஆசிரியர் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், முத‌மைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர். விழாவின்போது சிறப்பாக செயலாற்றிய 383 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த ஆண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், நடப்பு கல்வியாண்டில் 3,336 முதுகலை ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இந்தியாவிலேயே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அக்கறைக்கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக திகழ்வதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழா விருது வழங்கும் நிகழ்‌ச்சியில் பேசிய அவர், மாநிலத்தின் மொத்த வருவாயில் 4-ல் ஒரு பகுதியை கல்விக்காக செலவிடுவதாகவும் குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com