திருமங்கலத்தில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்த 150 சிசிடிவி கேமராக்கள்
திருமங்கலம் நகர்பகுதி முழுவதும் 150 சிசிடிவி கேமராக்களில் முதற்கட்டமாக 48 கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம் டிஎஸ்பி வினோதினி ஆய்வு.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக தற்போது நகர் பகுதியில் 48 சிசிடிவி கேமராக்கள் இன்று முதல் பொருத்தப்பட்டு வருகிறது.
திருமங்கலம் நகர் பகுதியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இங்கு 424 தெருக்கள் உள்ளன தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கிராமப்புற பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.
விபத்துக்கள் ஏற்படுவதும், மார்க்கெட் பகுதியில் வழிப்பறி அதிக அளவில் நடப்பதாக தொடர்ந்து பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் சிசிடிவி கேமரா பொருத்த கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் திருமங்கலம் காவல் துறையுடன் பொதுமக்கள் இணைந்து 40 லட்சம் மதிப்பீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது என முடிவெடுத்து அதற்கான முதற்கட்ட பணியாக 48 கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது.
அப்போது திருமங்கலம் டிஎஸ்பி வினோதினி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருமங்கலம் நகர் பகுதி முழுவதும் 150 க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.