சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் கூட்டு வாகன சோதனை தீவிரம்

சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் கூட்டு வாகன சோதனை தீவிரம்
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி மாநில எல்லைகளில் கூட்டு வாகன சோதனை தீவிரம்

சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் தமிழக கேரள எல்லை இணைப்பு சோதனைச் சாவடிகளில் இரு மாநில கூட்டு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் இரு மாநிலங்களுக்குள்ளும் கஞ்சா, மதுபானம், தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள், மாத்திரைகள், ஊசி மருந்து ஆகியவை கொண்டு செல்வதை தடுக்கும் நோக்கில், தமிழக போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் கேரள சுங்கத்துறையினர் இணைந்து தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.

 இரு மாநிலங்களுக்குள் சென்று வரும் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகின்றன.

போதைப்பொருட்களோடு கணக்கில் வராத பணம் இருந்தால் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com