இதுதான் கர்மா is பூமராங்கா? - அடிச்சு தாக்கியவரை புரட்டியெடுத்த கழுதை - வைரல் வீடியோ!

இதுதான் கர்மா is பூமராங்கா? - அடிச்சு தாக்கியவரை புரட்டியெடுத்த கழுதை - வைரல் வீடியோ!

இதுதான் கர்மா is பூமராங்கா? - அடிச்சு தாக்கியவரை புரட்டியெடுத்த கழுதை - வைரல் வீடியோ!
Published on

விலங்குகளால் பேச முடியாது என்ற ஒரே காரணத்திற்காக அவற்றை தன்னால் இயன்றவரை என்ன வேண்டுமானாலும் ஆட்டிப்படைக்கலாம் என்ற எண்ணத்தில் நடத்தும் பல வீடியோக்களை பார்த்தும், சம்பவம் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால் அப்படியான தாக்குதலுக்கு ஆளாகும் விலங்குகள் திருப்பி அடித்தால் என்ன ஆகும் என்பதை உணர்த்தும் விதமான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிரப்பட்டுள்ளது வைரலாகியிருக்கிறது.

அதில், கழுதையை மேய்த்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் அந்த கழுதையை காட்டுமிராண்டித் தனமாக அடித்து தாக்கிவிட்டு, அதன் மீதே ஏறி உட்கார்ந்துக் கொண்டு செல்ல முற்படுகிறார். அப்போது கழுதை அந்த நபரின் காலை அலேக்காக கவ்வி கடித்து சரியான படிப்பினையை கற்பிக்கிறது. விடாமல் அந்த இளைஞரின் காலை கவ்விய படியே சுற்ற விடுகிறது.

இந்த வீடியோவை பாலிவுட் நடிகரும், நடிகை ஷ்ரத்தா கபூரின் தந்தையுமான சேகர் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் சாமி படத்தில் விவேக் கூறும் “பஞ்ச கல்யாணி பஞ்ச் கல்யாணி ஆகிடுச்சு” என்ற வசனத்தை போல கமெண்ட் செய்து வருகிறார்கள். அதில் வீடியோவின் செகண்ட் ஆஃப் தான் திருப்திகரமாக இருக்கிறது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com