'அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக சசிகலா கூறியுள்ளார்' - கடம்பூர் ராஜு

'அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக சசிகலா கூறியுள்ளார்' - கடம்பூர் ராஜு

'அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக சசிகலா கூறியுள்ளார்' - கடம்பூர் ராஜு
Published on

'தேர்தலுக்குப் பிறகு டிடிவி தினகரனுக்கு சில வேண்டுகோளை வைப்போம், அதை ஏற்றுக்கொண்டால் அவருக்கு இன்னும் நல்லது' என்று அமைச்சர் கடம்பூர் செ ராஜு தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி‌ சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜு, கயத்தார் நகரப்பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அமைச்சர் சொன்ன வேண்டுகோளை ஏற்றுதான் டிடிவி தினகரன் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக அமமுக நிர்வாகி சி.ஆர்.சரஸ்வதி குறிப்பிட்டார்.

ஆமாம் நிச்சயமாக நான்தான் வேண்டுகோள் வைத்தேன். இந்த வேண்டுகோளை ஏற்ற மாதிரி, 18 சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்ற போது டிடிவி தினகரனின் நண்பர்களாக இருந்து நாங்கள் சிலர் அவருக்கு வேண்டுகோள் வைத்தோம். ஒரு நிலைப்பாட்டை எடுக்க சொல்லி இருந்தோம். அந்த நிலைப்பாட்டை டிடிவி தினகரன்‌ எடுத்து இருந்தால் அவருடைய நிலைமையே வேறு, மற்றவர்கள் பேச்சை கேட்டு தவறான முடிவு எடுத்தது காரணமாக ஆட்சிக்கு இடையூறு ஏற்பட்டது'' என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com