\
ஒலிம்பிக்: இந்திய குத்துச்சண்டை வீரர் மணிஷ் கவுசிக் முதல் சுற்றிலேயே தோல்வி

ஒலிம்பிக்: இந்திய குத்துச்சண்டை வீரர் மணிஷ் கவுசிக் முதல் சுற்றிலேயே தோல்வி

ஒலிம்பிக்: இந்திய குத்துச்சண்டை வீரர் மணிஷ் கவுசிக் முதல் சுற்றிலேயே தோல்வி
Published on

டோக்கியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்காக குத்துச்சண்டை விளையாட்டில் லைட்வெயிட் பிரிவில் பங்கேற்று விளையாடிய மணிஷ் கவுசிக் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். 

பிரிட்டன் நாட்டின் Luke McCormack உடனான ஆட்டத்தில் 1 : 4 என்ற கணக்கில் மணிஷ் தோல்வியடைந்துள்ளார். தனது முதலாவது ஒலிம்பிக் போட்டியில் முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளார் அவர். 

2018 காமன்வெல்த் மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற அவர் இந்த முறை ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com