\
youtube
youtubex

YouTube விதிமீறலில் இந்தியா நம்பர் 1: 34 லட்சம் வீடியோக்களை தூக்கிய YouTube: வெளியான ரிப்போர்ட்!

உலகளவில் யூடியூபில் அதிக வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடாக இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2026 ஏப்ரல் முதல் ஜூன் வரை மட்டும் 34.4 லட்சம் வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன.
Published on: 

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

உலகளவில் யூடியூப்-லிருந்து அதிகளவில் வீடியோக்கள் நீக்கப்பட்ட நாடுகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெறும் மூன்று மாதங்களில் இந்தியாவில் பதிவேற்றப்பட்ட லட்சக்கணக்கான வீடியோக்களை யூடியூப் அதிரடியாக நீக்கியுள்ளது. இதற்கு என்ன காரணம், எந்த மாதிரியான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன?

இன்றைய காலகட்டத்தில் யூடியூப் வெகுஜன மக்கள் பயன்படுத்தும் பிரதான சமூக வலைதளமாக மாறியுள்ளது. தகவல்கள், பாடல்கள், செய்திகள், கருத்துகள், பொழுதுபோக்கு எனப் பல்வேறு வகையிலான பதிவுகள் இதில் பகிரப்படுகின்றன. அதேபோல, லட்சக்கணக்கான படைப்பாளிகளுக்குப் பணமும் புகழும் ஈட்டித் தரும் மிகப்பெரிய வருமான வாய்ப்பாகவும் இது திகழ்கிறது. ஆனால், இந்தத் தளத்தில் வீடியோக்களைப் பதிவேற்றுவதற்கு COMMUNITY GUIDLINES எனப்படும் கடுமையான விதிமுறைகள் உள்ளன.

youtube
youtubept web

வெறுப்புப் பேச்சு, வன்முறைக் காட்சிகள், பாலியல் உள்ளடக்கங்கள், குழந்தைகளுக்கு எதிரான ஆபத்துகள், தவறான தகவல்கள், மோசடிகள் போன்றவை யூடியூபின் சமூக வழிகாட்டுதல்களில் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விதிகளை மீறும் வீடியோக்கள் நீக்கப்படுவதுடன், வருமானம் ஈட்டும் வசதியும் (MONITASATION) நிறுத்தப்படும். மேலும், சம்பந்தப்பட்ட சேனல்களுக்கு ஸ்ட்ரைக் வழங்கப்படும். தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டால் சேனலே நிரந்தரமாக முடக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில், யூடியூபில் இருந்து நீக்கப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் மட்டும் இந்தியாவில் பதிவேற்றம் செய்யப்பட்ட 34.4 லட்சம் வீடியோக்களை யூடியூப் நீக்கியுள்ளது. இது மற்ற நாடுகளைவிட மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

youtube deleted 34 lakhs vidoes
youtube deleted 34 lakhs vidoes ai

முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளது.மேலும்,உலகளவில் யூடியூபின் விதிமுறைகளின் கீழ் நீக்கப்பட்ட மொத்த வீடியோக்களில் 31 சதவீதம் இந்தியாவில் பதிவேற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 12.4 லட்சம் வீடியோக்களுடன் இரண்டாவது இடத்திலும், இந்தோனேசியா 9.2 லட்சம் வீடியோக்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் , உலகளவில் நீக்கப்பட்ட வீடியோக்களில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விதிமீறல்கள்தான் முதலிடத்தில் உள்ளன. இதில் 76 லட்சத்திற்கும் அதிகமான வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக துன்புறுத்தல் மற்றும் இணையவழி மிரட்டல் தொடர்பாக 12.56 லட்சம் வீடியோக்களும்,வன்முறை தொடர்பாக 5.85 லட்சம் வீடியோக்களும் நீக்கப்பட்டுள்ளன.

youtube deleted comments
youtube deleted comments ai

அதே போல கமெண்ட்ஸ்-களிலும் பல்வேறு விதிமீறல்கள் நடக்கும் நிலையில் யூடியூப் கமெண்ட்ஸ்களையும் நீக்கி இருக்கிறது. வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி மொத்தம் 155 கோடிக்கும் அதிகமான கமெண்ட்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் நீக்கப்பட்ட கமெண்ட்களில் 84 சதவீதம், அதாவது சுமார் 131 கோடி கமெண்ட்கள் ஸ்பேம், மற்றும் மோசடி தொடர்பானவை. மேலும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான 11.4 கோடி கமெண்ட்களும் நீக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிற்கான இந்தப் புள்ளிவிவரங்கள்,யூடியூபின் உலகளாவிய விதிகளின் கீழ் நீக்கப்பட்ட காணொளிகளையே பிரதிபலிக்கின்றன. இந்தியச் சட்டத்தின் கீழோ அல்லது புகார்களின் அடிப்படையிலோ நீக்கப்பட்டவை அல்ல.