வருமான வரித்துறை சோதனை கறுப்பு பணத்தை ஒழிக்கும் அறுவை சிகிச்சை: தமிழிசை
நாட்டிலுள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்க செய்யப்படும் அறுவை சிகிச்சைதான் வருமான வரித்துறையினரின் சோதனை என பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஜெயா டிவி அலுவலகம், சசிகலா உறவினர்கள், நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் நேற்று முதல் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், சசிகலா உறவினர்கள் வீடுகளில் நடத்தப்பட்டு வரும் இந்த சோதனை நாட்டிலுள்ள கறுப்புப் பணத்தை ஒழிக்க செய்யப்படும் அறுவை சிகிச்சை தான் என்று கூறியுள்ளார். மேலும் இத்தகைய முயற்சியை வரவேற்காமல் எதிர்ப்பது, கடுமையாக விமர்சிப்பது ஆரோக்கியமான அரசியலா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வருமான வரித்துறையைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பாஜகாவிற்கு துளி அளவும் இல்லை என்றும் தமிழிசை தெரிவித்தார்.