ஜெயலலிதா சிகிச்சை சிடியைத் தேடியே சோதனை: திவாகரன்

ஜெயலலிதா சிகிச்சை சிடியைத் தேடியே சோதனை: திவாகரன்

ஜெயலலிதா சிகிச்சை சிடியைத் தேடியே சோதனை: திவாகரன்
Published on

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சிடியைத் தேடியே சோதனை நடத்தப்பட்டிருப்பதாக சசிகலாவின் சகோதாரர் திவாகரன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.டி.யை தேடியே சோதனை நடத்தப்பட்டிருப்பதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வருமான வரித்துறை சோதனைகள் மூலம் தங்களை பணியவைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவிற்கு ஏற்ற வகையில் தமிழகத்தில் பதவியிலிருப்பவர்கள் செயல்படுவதாகவும் திவாகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனிடையே கோடநாடு எஸ்டேட் பொதுமேலாளர் நடராஜன் கோவை வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக
ஆஜராகியுள்ளார். சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான கர்சன் எஸ்டேட்டில் ஆறு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், பல ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், நடராஜனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com