சொத்துக்களை மறைத்த விவகாரம்: சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார்

சொத்துக்களை மறைத்த விவகாரம்: சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார்

சொத்துக்களை மறைத்த விவகாரம்: சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார்
Published on

வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை தெரிவிக்காமல் மறைத்த புகாரில் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது வருமான வரித்துறை புகார்களைப் பதிவு செய்துள்ளது.

சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் மீது கருப்புப் பணத் தடுப்பு சட்டத்தின்கீழ் 4 புகார்களை பதிவு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் கருப்புப் பணத் தடுப்பு சட்டம் பிரிவு 50ன்கீழ் இந்தப் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள அசையும் சொத்துக்கள் குறித்து முற்றிலுமோ பகுதியாகவோ வருமானக் கணக்குத் தாக்கலில் தெரிவிக்கவில்லை என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜில் உள்ள 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து, அதே நாட்டில் 80 லட்சத்துக்கு உள்ள சொத்து மற்றும் அமெரிக்காவில் 3.28 கோடி ரூபாய்க்கு உள்ள சொத்து ஆகியவை பற்றி தெரிவிக்கவில்லை என்று வருமான வரித்துறை புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கார்த்தி சிதம்பரம் இணை பங்குதாரராக உள்ள செஸ் குளோபல் அட்வைசரி நிறுவனம் குறித்தும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com