பாவங்களைக் கழுவ காங்கிரஸ் முயற்சி: மோடி விமர்சனம்

பாவங்களைக் கழுவ காங்கிரஸ் முயற்சி: மோடி விமர்சனம்

பாவங்களைக் கழுவ காங்கிரஸ் முயற்சி: மோடி விமர்சனம்
Published on

காங்கிரஸ் கட்சி விவசாயிகளை கடந்த 70 ஆண்டுகளாக புறக்கணித்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் மே 12ம் தேதி வாக்குப்பதிவு நடை பெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால்தான் விவசாயிகள் தற்போது பிரச்னைகளை சந்தித்து வருவதாகவும், இதையெல்லாம் மறைத்துவிட்டு அந்தக் கட்சி பாவங்களைக் கழுவ முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் திரைமறைவில் ஒப்பந்தம் செய்து மறைமுகக் கூட்டணியில் இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். பல காலமாக காங்கிரஸ் கட்சி வறுமை குறித்து பேசி வருவதாகவும், ஆனால் ஏழைத் தாயின் மகன் பிரதமராக உயர்ந்தது குறித்து மவுனம் காப்பதாகவும் அவர் கூறினார். கர்நாடகாவின் சிறப்பான எதிர்காலத்திற்கு காங்கிரஸ் கட்சி தண்டிக்கப்படவேண்டும் என அவர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com