\
தலைவர் பதவிக்கு பை... பை... : பாப்கார்ன் சாப்பிட்டு படம் பார்த்த ராகுல் 

தலைவர் பதவிக்கு பை... பை... : பாப்கார்ன் சாப்பிட்டு படம் பார்த்த ராகுல் 

தலைவர் பதவிக்கு பை... பை... : பாப்கார்ன் சாப்பிட்டு படம் பார்த்த ராகுல் 
Published on

தனது ராஜினாமாவுக்குப் பிறகு ராகுல் காந்தி, டெல்லி திரையரங்கம் ஒன்றில் படம் பார்த்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

கடந்த 3ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் ராகுல் காந்தி. அப்போது தாமதம் இல்லாமல், புதிய தலைவரை கட்சி தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். ஏற்கெனவே தாம் ராஜினாமா கடிதத்தை வழங்கிவிட்டதால், தா‌ம் தலைவர் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றும் அவர் கூறினார். 

மேலும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், எனவே காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த அறிவிப்புக்குப் பின் காங். தனது தலைவராக யாரை தேர்ந்தெடுக்கும் என்பது பேசுப் பொருளானது. 

இந்நிலையில் தனது ராஜினாமாவை அடுத்து ராகுல் காந்தி சம்பந்தமாக ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் ராகுல் திரையரங்கில் உட்கார்ந்து படம் பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது. அது சம்பந்தமான தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. 

டெல்லியிலுள்ள மல்டிப்ளக்ஸ் தியேட்டரில்தான் அவர் பொது மக்களுடன் உட்கார்ந்து திரைப்படம் பார்த்துள்ளார். அவர், ஹிந்தி திரைப்படமான ‘ஆர்டிகல்15’ படத்தை கண்டு ரசித்துள்ளார். இதனை அவருடன் படம் பார்த்துக் கொண்டிருந்த சிலர் வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளனர். அதில் பாப்கார்ன் சாப்பிட்டபடி மிக சகஜமாக படம் பார்த்து ரசித்த ராகுலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மே25 அன்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தின் போது தனது கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com