”இந்த இடத்துல கொலையே நடந்தாலும் தண்டனை கிடையாதாம்” எங்கு? ஏன் தெரியுமா?

”இந்த இடத்துல கொலையே நடந்தாலும் தண்டனை கிடையாதாம்” எங்கு? ஏன் தெரியுமா?
”இந்த இடத்துல கொலையே நடந்தாலும் தண்டனை கிடையாதாம்”  எங்கு? ஏன் தெரியுமா?

கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவே அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய மண்டலமே இருக்கு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அப்படியான பகுதியை பற்றிதான் பார்க்கப்போகிறோம்.

மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுவாக குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் சம்பவம் நடந்த போது தப்பித்தாலும் என்றாவது ஒருநாள் சட்டத்தின் பிடியில் சிக்குவது வழக்கமான நடைமுறையாக இருக்கும். அமெரிக்காவில் உள்ள ஒரு தேசிய பூங்காவின் ஒரு பகுதியில் யார் யாரை கொலை செய்தாலும் அந்த குற்றவாளிக்கு தண்டனையே கிடைக்காதாம்.

மரண மண்டலம் என அழைக்கப்படும் இந்த பகுதி அமெரிக்காவின் பிரபல யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் அமைந்திருக்கிறது. ஏனெனில் இங்குதான் மக்கள் தண்டனைக்கு அஞ்சாமல் குற்றம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

சுமார் 3,500 சதுர மைல்கள் கொண்ட இந்த பூங்கா காட்டு விலங்குகளாலும் எழில்கொஞ்சும் அழகான இயற்கைக்காட்சிகளாலும் நிரம்பியுள்ளது. இங்குதான் உலகின் செயலில் உள்ள சூடான நீருற்று உள்ள பகுதியாக அறியப்படுகிறது. இந்த பூங்காவினுள்தான் சுமார் 50 மைல் பரப்பளவில் நீளமான சட்டத்திட்டங்களுக்கு உட்படாத நிலம் உள்ளது.

ஏன் இந்த பகுதியை மரண மண்டலம் என்றும், சட்டவிரோதமான பகுதி என்றும் அழைக்கப்படுகிறது?

தேசிய பூங்காவின் பெரும்பகுதி வயோமிங்கின் அதிகார வரம்பிற்குள் வருகிறது. இடாஹோ என்ற பகுதியின் கீழ் இந்த மரண மண்டலம் வருகிறது.

பொதுவாக யாராவது ஒரு குற்றத்தைச் செய்தால், அவர்கள் "குற்றம் செய்யப்பட்ட மாநிலம் மற்றும் மாவட்டத்தின் நடுநிலை நடுவர் மன்றத்தால் விரைவான மற்றும் பொது விசாரணைக்கு" உட்படுவார்கள் என அமெரிக்க அரசியலமைப்பின் ஆறாவது திருத்தம் கூறுகிறது.

ஆனால், யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவின் குறிப்பிட்ட பகுதியில் மக்கள் யாரும் வசிக்காத நிலையில், நடுவர் மன்றம் அமைக்க இயலாது என்பதால் அந்தப் பகுதியில் குற்றம் செய்பவரைத் தண்டிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com