ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன்

ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன்
ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸிடம்தான் கேள்வி எழுப்ப வேண்டும் - நிர்மலா சீதாராமன்

ரிலையன்ஸ் ஒப்பந்த விவகாரம் குறித்து காங்கிரஸிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியிலேயே பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் இடையே ரஃபேல் ஒப்பந்தம் போட திட்டமிடப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நிர்மாலா சீதாராமன், “ரஃபேல் விவகாரம் குறித்து 4 முறை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கப்பட்டுள்ளது. அரசு அளித்த பதில் அடிப்படையில் காங்கிரஸ் விவாதம் நடத்துகிறதா என்பது கேள்விக்குறி?. 

2012ல் காங்கிரஸ் ஆட்சியிலேயே டசால்ட், ரிலையன்ஸ் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தமிடத் திட்டமிடப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் ரிலையன்ஸ் உடன் ஒப்பந்தமிடத் திட்டமிடப்பட்ட போது பெரிதாகப் பேசப்படவில்லை. தற்போது ரஃபேல் ஒப்பந்தம் இரு அரசுகளுக்கிடையே போடப்பட்டுள்ளது. அரசுகளுக்கிடையே போடப்பட்டுள்ள ஓப்பந்தத்தில் எந்த நிறுவனத்தையும் குறிப்பிட முடியாது. ஆகையால் ரிலையன்ஸ் ஒப்பந்த விவகாரம் குறித்து காங்கிரஸிடம் தான் கேள்வி எழுப்ப வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com