“நீதிபதிகளே நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் வந்தது மோடி ஆட்சியில்தான்”- ராகுல்

“நீதிபதிகளே நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் வந்தது மோடி ஆட்சியில்தான்”- ராகுல்

“நீதிபதிகளே நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் வந்தது மோடி ஆட்சியில்தான்”- ராகுல்
Published on

பிரியங்கா காந்தி தனது முதல் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மீது சரமாரியான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தங்களின் பிரச்சார கூட்டங்களை முழு வீச்சுடன் தொடங்கியுள்ளன. அத்துடன் அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் தேர்விலும் மும்முரம் காட்டி வருகின்றன. அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் குஜராத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் கொள்கைகளை வரும் தேர்தலில் தோற்கடிக்கவேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுகூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். கட்சி பொறுப்பு ஏற்றப் பிறகு பிரியங்கா காந்தி பங்குபேறும் முதல் பொதுக்கூட்டம் இதுதான். இந்தக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி உரையாற்றினார். அதில் அவர், பிரதமர் மோடி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார். குறிப்பாக 2014 தேர்தலின் போது அனைத்து மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் எனக் கூறிய வாக்குறுதி என்ன ஆனாது? அதேபோல மகளிர் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்த வாக்குறுதி எங்கே நிறைவேற்றப்பட்டது.

மேலும் இந்தத் தேர்தலில் முக்கியமான அம்சங்கள் மகளிர் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, விவசாயிகளின் நிலை ஆகியவையாகும். இதைதான் நீங்கள் வாக்களிக்கும் போது நினைவில் வைத்துகொள்ளவேண்டும். ஏனென்றால் நீங்கள் வாக்களிக்க போவது உங்களின் ஏதிர்காலத்திற்கானது என்பதை மறந்துவிடாதீர்கள். அத்துடன் நம்முடைய அரசு நிறுவனங்கள் அனைத்தும் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நாடு முழுவதும் வெறுப்பு உணர்வும் அதிகம் பரவிவருகின்றன. அதனால் நீங்களும் நானும் சேர்ந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய சூழலில் உள்ளோம் எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நீண்ட வருட இடைவேளைக்குப் பிறகு குஜராத்தில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தின் நோக்கம் குஜராத்திலும் இந்தியாவிலும் தற்போது இருக்கும் அரசின் கொள்கைகளை எதிர்த்து போராடவேயாகும். அத்துடன் வரலாற்றில் முதன்முறையாக உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் தங்கள் சுதந்திரமாக பணியாற்ற முடியவில்லை என்று பத்திரிகைகள் கூறியது இந்த ஆட்சி காலத்தில்தான். பொதுவாக நியாயம் வேண்டும் என்று அனைவரும் உச்சநீதிமன்றம் நாடி வருவார்கள். மாறாக உச்சநீதி மன்ற நீதிபதிகள் நியாயம் வேண்டும் என ஊடகத்திற்கு முன் வந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது” எனத் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com