“பிரதமரை ‘டீ விற்பவர்’ என விமர்சித்தவர்கள் இன்று தேயிலை பறிக்கிறார்கள்” - ராஜ்நாத் சிங்

“பிரதமரை ‘டீ விற்பவர்’ என விமர்சித்தவர்கள் இன்று தேயிலை பறிக்கிறார்கள்” - ராஜ்நாத் சிங்

“பிரதமரை ‘டீ விற்பவர்’ என விமர்சித்தவர்கள் இன்று தேயிலை பறிக்கிறார்கள்” - ராஜ்நாத் சிங்
Published on

பிரதமரை ‘டீ விற்பவர்’ என விமர்சித்தவர்கள் இன்று தேயிலை பறித்துக் கொண்டிருக்கிறார்கள் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

“அன்று பிரதமர் மோடியை ‘டீ விற்பவர்’ என விமர்சித்தவர்கள் இன்று தேயிலை பறித்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு அதை விற்பனையும் செய்கிறார்கள். அவர்களை தேயிலை தோட்டத்தின் பக்கமாக திருப்பியதே அந்த அசலான டீ விற்பவர்தான். ஆனால் ஒன்று நீங்கள் எல்லோரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அசலான மற்றும் அங்கீகாரம் கொண்ட டீ விற்பவர் எங்களுடன் தான் இருக்கிறார்” என அசாம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் மாநாட்டில் பேசியுள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 

அண்மையில் அசாம் மாநிலத்திற்கு தேர்தல் பரப்புரை பணிக்காக சென்றிருந்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தேயிலை தோட்டத்திற்கு சென்று தேயிலை பறித்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அசாம் மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு 365 ரூபாய் கொடுக்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தார். 

அசாம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com