சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்

சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் வெற்றியை பாதித்த காங்கிரஸ்
Published on

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள், 8 தொகுதிகளில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி வேட்பாளர்களின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது. 

மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாட்டிலேயே அதிக எம்.பி தொகுதிகளை கொண்ட மாநிலம். மொத்தம் 80 தொகுதிகள். அதனால், உத்தரப் பிரதேசத்தில் தேசிய கட்சிகள் அதிக கவனம் செலுத்தும். 2014 தேர்தலில் பாஜக 71 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. 

இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெறுவது குறித்து தொடக்கத்தில் இருந்தே பேச்சுகள் அடிபட்டன. ஆனால், மாயாவதி காங்கிரஸ் உடனான கூட்டணிக்கு கடைசி வரை சம்மதிக்கவே இல்லை. அகிலேஷ் தரப்பு கூட மாயாவதி ஒத்துக் கொண்டால் சம்மதம்தான் என்று கூறியது. 

அதனால், பாஜக, சமாஜ்வாதி-பகுஜன், காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி. ஆனால், தேர்தல் முடிவில் பாஜக 64 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் அபார வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் 10, சமாஜ்வாடி 5 இடங்களில் மட்டுமே வென்றன. காங்கிரஸ் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலியில் மட்டும் வென்றது. 

இந்த தேர்தல் முடிவுகளை உற்று நோக்கினால், 8 தொகுதிகளில் பாஜக மற்றும் சமாஜ்வாதி-பகுஜன் வேட்பாளர்கள் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் சொற்பமானவை. ஆனால், அந்த தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை சேர்த்தால் நிச்சயம் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள். 

பதுன் தொகுதி:

பதுன் தொகுதியில் பாஜக வேட்பாளர் சங்மித்ரா மவுர்யா 5,11,352 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர் தர்மேந்திர யாதவ் 4,92,898 வாக்குகளும் பெற்றனர். வாக்கு வித்தியாசம் 18,454 வாக்குகள்தான். ஆனால், இதே தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 51,896. 

பண்டா தொகுதி:

அதேபோல், பண்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் சிங் படேல் 4,77,926 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர் ஷியாமா ஷரன் குப்தா 4,18,988 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 58,938 வாக்குகள். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பல்குமார் படேல் 75,350 வாக்குகள் பெற்றுள்ளார்.  

பராபங்கி தொகுதி:

பராபங்கி தொகுதியில் பாஜக வேட்பாளர் உபேந்திர சிங் ராவத் 5,35,594 வாக்குகளும், சமாஜ்வாதி வேட்பாளர் ராம் சாகர் ராவத் 4,25,624 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 1,10,140 வாக்குகள். இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தனுஜ் புனியா பெற்ற வாக்குகள் 1,59,611.

பஸ்டி தொகுதி:

பஸ்டி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹரிஷ் சந்திர 4,71,162 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் ராம் பிரசாத் சவுத்ரி 4,40,80 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 30,354 வாக்குகள்தான். காங்கிரஸ் வேட்பாளர் ராஜ் கிஷோர் சிங் 86,453 வாக்குகள் பெற்றுள்ளார். 

தவுரரா தொகுதி:

தவுரரா தொகுதியில் பாஜக வேட்பாளர் ரேகா வெர்மா 5,12,905 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் அர்ஷத் இலியாஸ் சித்திக்யு 3,52,294 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 1,60,611 வாக்குகள். காங்கிரஸ் வேட்பாளர் குன்வர் ஜிதின் 1,62,856 வாக்குகள் பெற்றுள்ளார். 

மீரட் தொகுதி:

மீரட் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராஜேந்திர அகர்வால் 5,86,184 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் 5,81,455 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் வெறும் 4,729 வாக்குகள்தான். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் ஹரேந்திர அகர்வால் பெற்ற வாக்குகள் 34,479. 

சுல்தான்பூர் தொகுதி:

சுல்தான்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மேனகா காந்தி 4,59,196 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் 4,44,670 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 14,526 வாக்குகள். ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பெற்றுள்ள வாக்குகள் 41,681. 

சண்ட் கபீர் நகர் தொகுதி:

சண்ட் கபீர் நகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரவீன் குமார் நிஷாத் 4,67,543 வாக்குகளும், பகுஜன் சமாஜ் வேட்பாளர் பீஷ்மா ஷங்கர் 4,31,794 வாக்குகளும் பெற்றுள்ளனர். இருவருக்கும் இடையிலான வித்தியாசம் 35,749. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர் பால் சந்திர யாதவ் பெற்ற வாக்குகள் 1,28,506.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com