பாஜகவை மிரட்டும் இடைத்தேர்தல் முடிவுகள்: சரியும் வாக்குவங்கி, தொடரும் தோல்வி!

பாஜகவை மிரட்டும் இடைத்தேர்தல் முடிவுகள்: சரியும் வாக்குவங்கி, தொடரும் தோல்வி!

பாஜகவை மிரட்டும் இடைத்தேர்தல் முடிவுகள்: சரியும் வாக்குவங்கி, தொடரும் தோல்வி!
Published on

2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற இடைத்தேர்தல்களில், எதிர்க்கட்சிகள் வசமிருந்த ஒரு தொகுதியைக் கூட பாரதிய ஜனதாவால் கைப்பற்ற முடியவில்லை.

2014ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் 282 இடங்களில் வெற்றி பெற்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 315 இடங்களை தன் வசம் வைத்திருந்தது. கூட்டணிக் கட்சிகளுடன் இருந்தாலும் மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களுடன் இருப்பது பாஜகவுக்கு பலமாக இருந்தது. இதனால், எந்தக் கட்சியையும் பாஜக எதிர்பார்க்க தேவையில்லை என்ற நிலை இருந்தது. அப்படியொரு வலுவான கட்சியாக 2014ல் உருவெடுத்த பாஜக, அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தது.

இருப்பினும், சமீபகாலமாக இடைத் தேர்தல்களில் பாஜக தொடர்ச்சியாகத் தோல்வியை சந்தித்து வருகிறது. ஒரு புறம் மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று வந்தாலும், மறுபுறம் இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு தோல்வி தொடர்ந்தது. சமீபத்தில் வெளியான இடைத்தேர்தல் முடிவுகளும் பாஜகவுக்கு பின்னடைவாகவே அமைந்துள்ளது. 4 மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ஒன்றில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது. தன் வசம் இருந்த மூன்று தொகுதிகளில் இரண்டினை பாஜக இழந்துள்ளது. இதில், உத்தரபிரதேச மாநிலத்தின் கைரானா தொகுதியில் தோல்வி அடைந்தது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

மோடி தலைமையில் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்றது முதல் மொத்தம் 27 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதில், பாஜக மொத்தம் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகள் வசம் இருந்த ஒரு தொகுதியைக் கூட பாஜக கைப்பற்றவில்லை. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தன் வசம் இருந்த 8 தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. இதனால், மக்களவையில் அதன் பலம் குறைந்துள்ளது. 

இதுஒரு புறம் இருக்க பாஜக வெற்றி பெற்ற இடங்களில் கூட எதிர்க்கட்சிகளின் வாக்குவங்கி சதவீதம் கணிசமாக உயர்ந்து வந்துள்ளது. பாஜகவின் வாக்கு சதவீதம் சரிவை சந்தித்து வருகிறது. 

2014ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் குஜராத் மாநிலத்தின் வதோதரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 70 சதவீதத்திற்கு மேல் பெற்று பாஜக அபார வெற்றி பெற்றது. ஆனால், 2016ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள ஷக்டோல் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக முறையே 44.65, 44.06 சதவீதம் வாக்குகளே பெற்றன. சமீபத்தில் பாஜக வெற்றி பெற்ற பல்ஜர் தொகுதியில் கூட வெறும் 31.35 சதவீதம் வாக்குகளே அக்கட்சிக்கு கிடைத்தன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com