\
“தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும்”-இந்து மக்கள் கட்சி

“தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும்”-இந்து மக்கள் கட்சி

“தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும்”-இந்து மக்கள் கட்சி
Published on

தடையை மீறி விநாயகர் ஊர்வலம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில் இந்து மக்கள் கட்சி சார்பில் தடையை மீறி நடுரோட்டில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடுரோட்டில் விநாயகர் சிலையை வைத்து அதற்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டு தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.


மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும், விநாயகர் விசர்ஜன ஊர்வலத்திற்கும் அரசு தடை விதித்தால் தடையை மீறி ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சி நடத்தும் என்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com