”இப்ப இல்லையென்றால் இனி எப்பவும் இல்லை...” மதுரையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்
மதுரையில் எம்ஜிஆர் மற்றும் அண்ணா ஆகியோரை ஒப்பிட்டு ரஜினி ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
மதுரையில் நடிகர் விஜயை அவரது ரசிகர்கள் எம்ஜிஆருடன் ஒப்பிட்டு ஒட்டப்பட்ட போஸ்டருக்கு அமைச்சர்கள் தங்களது எதிர் கருத்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள், நான் எம்ஜிஆர் அல்ல ஆனால் நான் எம்ஜிஆர் அவர்களின் நல்லாட்சியை தருவேன்.. அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம்.. இப்ப இல்லை என்றால் எப்பவும் இல்லை என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டரில் அண்ணா, எம்ஜிஆர் அவர்களைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தான் நல்லாட்சியை தரமுடியும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் அவர்களது புகைப்படத்தை ஒன்றன் பின் ஒன்றாக அச்சிட்ட போஸ்டர்களை மதுரை மாநகர் முழுவதும் ஒட்டி உள்ளனர்.
இதேபோல் ரஜினி ரசிகர்கள், இதுவரை நடந்தது அண்ணாவின் வழித்தோன்றல்களின் திராவிட ஆட்சி எனவும், 2021 தமிழகத்தில் நடக்கப்போவது அண்ணாத்தயின் ஆன்மீக அரசியலின் நல்லாட்சி என்ற வாசகங்களுடன் , எம்ஜிஆர் கலைஞர் ஜெயலலிதா அண்ணா ஆகியோரின் புகைப்படங்களுடன் திமுக அதிமுக கட்சிக் கொடியின் வண்ணங்களுடன் மதுரை மாநகர் முழுவதும் போட்டிபோட்டு ரஜினி ரசிகர்கள் போஸ்டர் யுத்தத்தில் குதித்துள்ளனர்.

