தனிகட்சி தொடங்குகிறாரா மு.க.அழகிரி? வரும் 20ஆம் தேதி ஆலோசனை

தனிகட்சி தொடங்குகிறாரா மு.க.அழகிரி? வரும் 20ஆம் தேதி ஆலோசனை
தனிகட்சி தொடங்குகிறாரா மு.க.அழகிரி? வரும் 20ஆம் தேதி ஆலோசனை

தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக வரும் 20 ஆம் தேதி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த மு.க.அழகிரி 2014 ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார், அதன்பிறகு நேரடி அரசியலில் பங்கேற்காமல் இருந்தார் அவர். அவ்வப்போது அரசியல் பிரவேசம் குறித்து பேசிவரும் அழகிரி, தற்போது தனிக்கட்சி குறித்த ஆலோசனையில் ஈடுபட உள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

வரும் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பல்வேறு மாவட்டங்களுக்கும் அழகிரி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். கலைஞர் பெயரில் இந்த அமைப்பு அல்லது கட்சி இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்து பேசிய அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து “ திமுகவில் இருந்து அழகிரி உட்பட அவரின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது, அப்போதிலிருந்து நாங்கள் அமைதியாகவே உள்ளோம். எங்களுக்கு திமுகவை தவிர வேறு கட்சி இல்லை, அதற்காக ஸ்டாலின் அவர்களை தலைவராக ஏற்று திமுகவில் இணையவும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம், அதற்கு பலனில்லை. எனவேதான் இப்போது இந்த முடிவினை எடுத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com