இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அழைப்பு விடுத்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இந்த சமூகத்தை நேசிக்க கூடிய தலைவர்களை கொண்டுவர இளைஞர்களால் மட்டும் தான் முடியும். என்னைப் பொறுத்தவரை இளைஞர்கள் பெருமளவிற்கு அரசியலுக்கு வர வேண்டும். நேர்மையான சமூகத்தை உருகாக்குவதன் மூலமாக அரசியலில் நேர்மையான தலைமையை உருவாக்க முடியும்" என்றார்.