\
உயிர் பிரியும் வரை பாஜகவில்தான் இருப்பேன்: தமிழிசை

உயிர் பிரியும் வரை பாஜகவில்தான் இருப்பேன்: தமிழிசை

உயிர் பிரியும் வரை பாஜகவில்தான் இருப்பேன்: தமிழிசை
Published on

பாரதிய ஜனதா கட்சியை விட்டு விலகபோவதாக வெளியாகும் தகவல்கள் அவதூறானவை என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் தமிழிசை, உயிர் பிரியும் வரை பாஜகவில்தான் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.  மேலும் அவர் கூறுகையில், “இறுதி மூச்சு உள்ளவரை பாஜகவிற்காக பணியாற்றுவேன். கட்சியை விட்டு விலகுவதாக வரும் தகவல் அவதூறானது. 

தமிழிசையை எந்தவிதத்திலும் பாஜகவிடம் இருந்து பிரிக்க முடியாது. உயிர் பிரிந்தால் ஒழிய பாஜகவிடம் இருந்து பிரிக்க முடியாது. எனது வாழ்க்கையின் குறிக்கோளே தமிழகத்தில் தாமரையை அரியணை ஏற்ற வேண்டும் என்பது தான். தமிழகத்தில் பாஜக காலூன்றி விடப்போகிறதே என்றுதான் இப்படிப்பட்ட வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன” என்றார்.

திராவிடம், தேசியம் குறித்த விவாதங்களுக்குப் பதிலளித்த தமிழிசை, “மாநிலத்துடன் தேசியத்தையும் சேர்த்தே பார்க்கிறோம். திராவிடமும் தேசியமும் வேறு அல்ல, ஒன்றுதான். தேசிய உணர்வோடு கூடிய தமிழக அக்கறை, தமிழக உணர்வுடன் கூடிய தேசிய அக்கறை இருந்தால்தான் நேர்மறையான அரசியலை கொண்டு வர முடியும். தேசியமும், மாநிலமும் ஒன்றாக சிந்தித்தால் மோதல் வராது” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com