\
தோல்வி கூட அடைவேன், பணம் தரமாட்டேன் : கமல்

தோல்வி கூட அடைவேன், பணம் தரமாட்டேன் : கமல்

தோல்வி கூட அடைவேன், பணம் தரமாட்டேன் : கமல்
Published on

சென்னையில் நிகழ்ச்சியில் ஓன்றில் செய்தியாளார்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் 'தேர்தலில் தோல்வியடைந்தாலும் அடைவேனே தவிர வாக்காளர்களுக்கு பணம் தர மாட்டேன்' என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சென்னை தியாகராய நகரில் 'தமிழ்நாட்டிற்கான தலைமைத்துவம், அடுத்த சுற்று' என்ற தலைப்பிலான நிகழ்ச்சி ஓன்றில்  பங்கேற்றுப் பேசினார். அப்போது, இன்றைய தொழுநோயான சாதி மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது என்று அவர் கூறினார். அடுத்த தலைமுறையினரை சாதி என்னும் தொழுநோயில் இருந்து காப்பாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். அரசியல் விளையாட்டல்ல, தான் என்ன செய்கிறேன் என்பதில் கவனமாக இருக்கிறேன் என்றும் கமல் கூறினார். 


தனது சொந்தப் பணத்தில் கட்சியை நடத்தி வருகிறேன் என்ற அவர், தஞ்சையில் இருந்து கொண்டு கம்போடியாவில் திறம்பட ஆட்சியை நடத்தியவர்கள்தான் தமிழர்கள் என்று நினைவுகூர்ந்தார். தமிழர்கள் நினைத்தால் தமிழ்நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும் என்ற கமல்ஹாசன், ஒவ்வொரு தமிழர் மீதும் தலா ஒரு லட்சத்து 45ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். “தேர்தலில் தோல்வி அடையவும் நான் தயாராக இருக்கிறேன். வெற்றி என்பது குறிப்பிட்ட வழியில் கிடைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு ஒருபோதும் பணம் கொடுக்க மாட்டேன்”. இந்த உறுதிமொழியால் கட்சிக்கு ஆபத்துதான். ஆனாலும் வாக்காளர்களுக்குப் பணம் தரமாட்டேன் என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com