\
அனிதா குறித்த ட்வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை : மாஃபா பாண்டியராஜன்

அனிதா குறித்த ட்வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை : மாஃபா பாண்டியராஜன்

அனிதா குறித்த ட்வீட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை : மாஃபா பாண்டியராஜன்
Published on

தனது ட்விட்டர் கணக்கில் அனிதா வீடியோவை யாரோ பதிவேற்றம் செய்துள்ளனர் என மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.

அரியலூர் அனிதா பேசுவதுபோல் மாஃபா பாண்டியராஜன் ட்விட்டரில் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. அதற்கு அனிதாவின் சகோதரர் மணிரத்னம் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த பதிவு நீக்கப்பட்டது.

இந்நிலையில், மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் அனுமதியின்றி எனது ட்விட்டரில் அனிதா வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளனர். பதிவிட்டது யார் என்பது குறித்து சைபர் கிரைமில் புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்படும். எந்த நிலையிலும் யாரையும் அவதூறு செய்யும் எண்ணம் எனக்கு இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com