டிரெண்டிங்
“மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்கனவே நான் நிறைவேற்றிவிட்டேன்” - முதல்வர் பழனிசாமி
“மக்கள் வைத்த கோரிக்கைகளை ஏற்கனவே நான் நிறைவேற்றிவிட்டேன்” - முதல்வர் பழனிசாமி
ஏற்கெனவே மக்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டேன் என எடப்பாடி தொகுதியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் பழனிசாமி ஆரவாரமில்லாமல் சாலையில் நடந்துவந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்கள் வாங்குறுதிகள் மக்களிடம் எடுபட்டதா என்பது தேர்தல் முடிவில் தெரியும். அதிமுக தேர்தல் அறிக்கை மக்களை மகிழ்ச்சியடையச் செய்யும் அறிக்கை. ஏற்கெனவே மக்கள் என்னிடம் வைத்த கோரிக்கையெல்லாம் நிறைவேற்றியுள்ளேன். எடப்பாடி தொகுதி ஏற்றம் பெற எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளேன்.
6 இலவச சிலிண்டர் அறிவிப்பு எடுபடுமா? எடுபடாதா? என்பதை தேர்தலுக்கு பிறகு பாருங்கள். இன்னும் மக்கள் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.